News April 18, 2025

குலசையில் 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன

image

இஸ்ரோ தலைவர் நாராயணம் இன்று நாகர்கோவில் வந்தார். அவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கான 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று கூறினார்.

Similar News

News July 11, 2025

குமரியில் திருமணத் தடை நீக்கும் ஜடாதீஸ்வரர்

image

திருவட்டாறு ஆதிகேசவபெருமாள் கோயிலின் எதிரில் தளியல் தெருவில் ஜடாதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கு பகவான் உக்கிர மூர்த்தியாகக் காட்சி தருவதால் செல்வச் செழிப்பு தரும் தாரை வழிபாடு முக்கியமானதாக உள்ளது. திருமணத் தடை நீங்க இங்கே சுயம்வர அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், நெய்விளக்கு, எள் விளக்கு ஆகியவற்றுடன் கோயிலை 3 முறை வலம் வந்து விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும்.

News July 11, 2025

குமரியில் விஷ ஜந்து கடித்து கொத்தனார் உயிரிழப்பு

image

திருவட்டார் அருகே தச்சக்குடி விளையை சேர்ந்த கொத்தனார் சதீஷ்(37). திருமணமாகாத இவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்துள்ளது. கடந்த ஜூலை.07 தேதியன்று  அருகில் உள்ள வயலில் மயங்கிய நிலையில்
கிடந்தவரை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சதீஷ் உயிரிழந்தார். இதுக்குறித்து  திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

News July 11, 2025

கன்னியாகுமரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் ஜூலை.26 அன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 113 நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!