News April 18, 2025
குலசையில் 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன

இஸ்ரோ தலைவர் நாராயணம் இன்று நாகர்கோவில் வந்தார். அவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் வரவேற்றனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசும்போது, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டணத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கான 90% நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இரண்டு ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என்று கூறினார்.
Similar News
News November 28, 2025
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் டிச.3ம் தேதி (புதன் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அறிவித்துள்ளார்.
News November 28, 2025
குமரி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

குமரி மாவட்ட மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். (SHARE)
News November 28, 2025
குமரி: உங்கள் பெயர் நீங்கிவிடும்.. கடைசி வாய்ப்பு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், இதுவரை சுமார் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் திரும்ப வழங்கப்படாமல் இருப்பதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். படிவங்களை திரும்ப வழங்க நவம்பர் 30 கடைசி நாளாகும். இல்லையெனில் 2026 வாக்காளர் பட்டியலில் இருந்து திரும்பி வழங்காத வாக்காளர் பெயர்கள் தானாக நீங்கிவிடும் என தெரிவித்துள்ளார்.


