News August 16, 2024
குற்றாலத்தில் ‘சாரல் திருவிழா’ இன்று தொடக்கம்

குற்றால ‘சாரல் திருவிழா’ இன்று(ஆக.,16) தொடங்கி 4 நாள் நடைபெறுகிறது. விழாவில் முதலாவதாக, ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் காலை 10 மணிக்கு மலர் கண்காட்சி தொடக்க விழா நடைபெறுகிறது. தொடர்ந்து, கலைவாணா் அரங்கில் 11 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோர் தலைமை வகிக்கிறார். எம்.பி.க்கள் துரை வைகோ, ராணி ஸ்ரீகுமாா், பழனிநாடாா் எம்எல்ஏ முன்னிலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
Similar News
News August 11, 2025
தென்காசி: மிஸ் பண்ணாதீங்க.. நாளை கடைசி நாள்!

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. மாத சம்பளம் – ரூ.15,100 முதல் ரூ.35,100 வரை. 21 வயது நிரம்பிய தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (ஆக. 12) கடைசி நாள் என்பதால், விண்ணப்பிக்கதோர் உடனே<
News August 11, 2025
தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டத்தில் உள்ள மங்கம்மாள் சாலை துணைமின் நிலையத்தில் நாளை (12.8.2025, செவ்வாய்க்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன்நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News August 11, 2025
போதைப் பொருளுக்கு நாளை எதிரான விழிப்புணர்வு

தென்காசி, புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இ.சி.ஈஸ்வரன் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி கூட்டரங்கில் நாளை காலை தமிழ்நாடு துணை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்க உள்ளார். அதைத்தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.