News August 4, 2024
குற்றாலத்தில் குவியும் மக்கள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குற்றால மெயின், ஐந்தருவி, பழைய அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குவிந்து வருகின்றனர். மேலும், ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி குற்றாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
Similar News
News December 2, 2025
தென்காசியில் மாணவர் போக்சோவில் கைது

ஆலங்குளம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவிக்கும், வி.கே. புரத்தை சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஏமாற்றி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் கர்ப்பமானதுடன் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. புகாரின் பேரில் ஆலங்குளம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை போக்சோவில் கைது செய்தனர்.
News December 2, 2025
தென்காசி அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

தென்காசி அருகே பாட்ட பத்து பாரதி தெருவை சேர்ந்தவர் பலவேசம் மனைவி மாரியம்மாள் நேற்று வடகரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்ற போது மாரியம்மாள் பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். தென்காசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குறித்து இலத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
News December 2, 2025
தென்காசி பகுதியில் வருகிற டிச.06 மின்தடை

தென்காசி மாவட்டம், மின் பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில்: தென்காசி மாவட்டத்தில் வரும் டிச.06 சனிக்கிழமை அன்று செங்கோட்டை, தென்காசி, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி பகுதியில் 9 – 3 வரையிலும் செங்கோட்டை பகுதியில் 4 – 5 மணி, சுரண்டை பகுதியில் 6மணி சாம்பவர் வடகரை மதியம் 2 மணி வரை மின்தடை SHARE!


