News April 15, 2025
குற்றவாளிகளை 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்

பழனி, புது தாராபுரம் ரோட்டில் நேற்று முன்தினம் ஒருவரை, மூன்று நபர்கள் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகார் அளித்த 2 மணி நேரத்திற்குள், குற்றவாளிகள் மூவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காவல்துறையின் இந்த மின்னல் வேக நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (13.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 13, 2025
JUST IN: திண்டுக்கல் அருகே சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு, நிலக்கோட்டை நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும் மினி வேனும் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மணியக்காரன்பட்டியைச் சேர்ந்த செல்வம்(45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 13, 2025
திண்டுக்கல்லில் தேர்வு ஒத்திவைப்பு!

திண்டுக்கல்–நத்தம் சாலையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று, நாளை நடைபெறவிருந்த மின்கம்பி உதவியாளர் தகுதிக்கான தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்தத் தேர்வு வருகிற 27, 28ஆம் தேதிகளில் திண்டுக்கல் நத்தம் சாலை குள்ளனம்பட்டி அருகே உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் என என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


