News March 23, 2025
குறைவில்லா வாழ்வைத் தந்தருளும் குமரகோட்டம் முருகன்

கோயில்களின் நகரம் என அழைக்கப்படும் காஞ்சியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குமரகோட்டம் முருகன் கோயில். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேற்றப்பட்டது. பொதுவாக பெருமாளுக்குத் தான் ஐந்து தலை நாகம் குடைபிடிப்பதைப் பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்து தலை நாகம் குடைபிடித்த படி இருப்பதை காணலாம். திருமணத்தடை நீங்க மற்றும் நாக தோஷம் விலக இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 17, 2025
காஞ்சிபுரம்: உங்களிடம் ரேஷன் அட்டை உள்ளதா?

காஞ்சிபுரம் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News December 17, 2025
JUST IN: காஞ்சிபுரம்: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 11,26,924 ஆகும். இறந்தவர்கள்- 57,658, (Double Entry) – 10,719, இடம் பெயர்ந்தவர்கள்- 1,46,621, கண்டறிய முடியாதவர்கள்- 58,675 மற்றும் மற்றவை (Others) – 601 என மொத்தம் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News December 17, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய வாக்குச்சாவடிகள்

காஞ்சிபுரத்தில் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு புதியதாக 144 வாக்குச்சாவடிகள் ஆரம்பமாகிறது. வாக்காளர் திருத்த பணிகள், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் டிசம்பர் 11 க்குள் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க கூறப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் இருந்து ஒரு லட்சம் பேர் நீக்கப்பட உள்ளனர். இறந்தவர்கள் பெயர், உரிய முகவரியில் வசிக்காதவர்கள் போன்றவைகள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


