News April 23, 2025

குறைகளை ‘TN SMART’ தளத்தில் புகாராக அளிக்கலாம்

image

சென்னை மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘<>TN SMART<<>>’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், புகார் விவரம் மற்றும் அதன் புகைப்படத்தை சமர்ப்பிக்கவும். அவசர நிலைகளுக்கு 1070 அல்லது 1077-ஐ அழைக்கவும். உங்கள் புகாரின் நிலை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 20, 2025

சென்னை: வெறி நாய் கடித்து துடி துடித்து பலி

image

சென்னை கொடுங்கையூர், கொய்யாதோப்பு 7வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அருள் (48) பெயிண்டர். கடந்த 8ம் தேதி சாலையில் சென்றபோது, தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 20, 2025

சென்னை: தூய்மைப் பணியாளர் தற்கொலை!

image

சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார். தூய்மைப் பணியாளராக உள்ளார். இவர் வீட்டு வாடகை கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (டிச.19) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அவருடைய உடலை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News December 20, 2025

சென்னையில் மிரட்டி மாமூல் வசூல்!

image

சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தம்பிதுரை (40). இவரது தம்பி தமிழழகன் (39). இவர்கள் இருவரும் ரவுடி நாகேந்திரனின் அக்கா மகன்கள் ஆவர். பிரபல குற்றவாளிகளான இவர்கள் இருவரும், நாகேந்திரனின் பெயரை சொல்லி மாமூல் வசூலிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!