News April 27, 2025
குறுவை சாகுபடிக்கு தேவையான விதை உரங்கள் இருப்பு: ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை பருவத்தில் 39 ஆயிரத்து 208 எக்டேர் பரப்பளவு சாகுபடி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்கு மொத்த விதை தேவை 1250 டன். தற்போது வரை 204 டன் குறுகிய கால நெல் ரகங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 241 டன் விதைகள் மற்றும் உரங்களும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
BREAKING: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நவ.29ம் தேதி மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
News November 27, 2025
மயிலாடுதுறை: தகராறில் கொத்தனார் பலி

சீர்காழி திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் கொத்தனார் கண்ணன்(43) அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜா (43) இருவரும் நேற்று இரவு ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ராஜா கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளார். இதையடுத்து பலத்த காயமடைந்த கண்ணன் சீர்காழி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார். சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 27, 2025
மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் ஆய்வு

மயிலாடுதுறை, சீர்காழி அரசு மருத்துவமனையில், நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் மருத்துவமனை உள்ள மக்களிடம் உதவி கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார். மேலும் இங்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் உடனிருந்தனர்.


