News March 29, 2024
குறும்படத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

தேனி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மின்னணு திரை வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு குறும்பு படம் திரையிடப்பட்டது. அதனை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆட்சியர் சஜீவனா பழங்குடியினர் மக்களுடன் அமர்ந்து குறும்படத்தை பார்வையிட்டார்.
Similar News
News October 24, 2025
தேனி: குறைந்த விலையில் வீடு வேண்டுமா ?

தேனி மக்களே,சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரது வாழ்க்கை கனவாக உள்ளது. ஆனால், கடும் விலை உயர்வால், அது பலருக்கு எட்டாத கனியாகவே உள்ளது. இதை மாற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக அரசு மானிய விலையில் வீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக உள்ளவர்கள் <
News October 24, 2025
தேனி: மருமகனின் வெறிச்செயல்

போடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58). இவரது மகள் காயத்ரியை, ரஞ்சித்குமாா் (25) என்பவர் காதல் திருமணம் செய்தாா். தற்போது இந்த தம்பதி பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித்குமாா் மது போதையில் ரவிச்சந்திரன் வீட்டுக்கு சென்று மனைவி காயத்ரியுடன் தகராறு செய்தாா். இதைத் தட்டிக் கேட்ட ரவிச்சந்திரனை கத்தியால் குத்தி தாக்கி உள்ளார். போடி போலீசார் ரஞ்சித்குமாா் மீது வழக்கு (அக்.23) பதிவு
News October 24, 2025
வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காட்சியளித்த முருகன்

பெரியகுளம் தென்கரைப் பகுதியில் அமைந்துள்ள பாலமுருகன் திருக்கோவிலில் வீற்றிருக்கும் முருகனுக்கு சஷ்டி விரத இரண்டாம் நாளை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முருகன் வெள்ளை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.


