News November 29, 2024
குறுஞ்செய்தி அனுப்பியது பேரிடர் மேலாண்மை ஆணையம்

ஃபெஞ்சல் புயல் நாளை கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அந்த செய்தியில் 30.11.2024 அன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் போது 70-90 கிமீ வேக காற்றுடன் கனமழை- அதிகன மழை பெய்யக்கூடும். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. உங்களுக்கும் வந்ததா?
Similar News
News December 8, 2025
பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை

2020ல் கீழ்பாக்கம் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்திய 53 வயது நபர் மீது, சிறுமியின் தாயார் புகாரின் பேரில் W-4 கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது. விசாரணை முடிந்து, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்தார்.
News December 8, 2025
சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


