News March 25, 2025

குறுக்கே வந்த நாய்; பயங்கர விபத்து

image

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்தார். இதனால் பேருந்தின் மீது பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த 5 பேர் காயம் அடைந்தனர்.

Similar News

News October 17, 2025

விழுப்புரம்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

image

விழுப்புரம் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <>”TNEB Mobile App”<<>> பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News October 17, 2025

விழுப்புரம்: போலி ஆவணம் மூலம் இன்சூரன்ஸ்!

image

திருச்சி, லால்குடியை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது லாரி கடந்த 2016ம் ஆண்டு விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. அந்த லாரிக்கு காப்பீடு செய்த இன்சூரன்ஸ் நிறுவனத்தில் முறையிட்டு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடு பெற்றுள்ளார். அதற்காக, போலி இன்சூரன்ஸ் ரசீது சமர்ப்பித்ததாக புகார் எழ, நிறுவன மேலாளர் அளித்த புகாரின் பேரில் செல்லப்பா மீது விழுப்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News October 17, 2025

விழுப்புரம் மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, M.K.மஹால், வீராட்டிக்குப்பம், தீர்க்க சுமங்கலி திருமண மண்டபம், பிடாரிப்பட்டு, சமூதாய கூடம், வேம்பி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம், தென்களவாய், அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகம், சங்கீதமங்கலம், JVS மஹால், திண்டிவனம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.

error: Content is protected !!