News May 22, 2024
குரோமிய கழிவுகள் அகற்றப்படுமா..?

இராணிப்பேட்டையில் மலை போல் குவிந்து கிடக்கும், மக்களின் உயிரை குடிக்கும் குரோமிய கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு மூலமாக பொது நல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் மத்திய மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10.06.2024 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தது.
Similar News
News April 20, 2025
ராணிப்பேட்டையில் ஆசிரியரிடம் செயின் பறிப்பு

பனப்பாக்கம் புது தெருவில் வசிப்பவர் கிருபாகரன் இவரது மனைவி அபிதா (49) தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். நேற்று முன் தினம் தலைமை ஆசிரியை வீட்டின் மாடிப்பகுதியில் தனியாக இருந்துள்ளார். அப்போது நைட்டி அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் ஆசிரியையின் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இதை அறிந்த மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதைப்பற்றிய விசாரணை நடக்கிறது.
News April 20, 2025
விவசாயிகள் குறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறித்த கூட்டம் ஏப்ரல் 25ஆம் தேதி காலை 11 மணிக்கு ராணிப்பேட்டை கலைக்கூடத்தில் நடைபெறுகிறது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை, வணிகம், வனத்துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்ளனர். விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 20, 2025
ராணிப்பேட்டை மாவட்ட முக்கிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் – 04172-272211
▶️தீத்தடுப்பு மற்றும் மீட்பு பணித்துறை – 101
▶️காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை – 1077
▶️காவல் துறை புகார் வாட்ஸ் அப் எண் – 9092700100
▶️பாலியல் வன்கொடுமை தடுப்பு – 1091
▶️குழந்தைகள் உதவி – 1098
▶️தாசில்தார், போளூர் – 9445000517
▶️பி.எஸ்.என்.எல் உதவி – 1500
ஷேர் பண்ணுங்க மக்களே