News September 15, 2024

குரூப் 2 தேர்வு: திண்டுக்கல்லில் 5778 பேர் ஆப்சென்ட்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 தேர்வினை 16,915 பேர் எழுதிய நிலையில் 5778 பேர் எழுதவில்லை. விண்ணப்பத்திருந்த 22,693 பேரில் 16,915 தேர்வு எழுதினர். 5778 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தேர்வு மையத்தில் கலெக்டர் பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார். சப் கலெக்டர் கிசான் குமார், பி.ஆர்.ஓ. நாக ராஜ பூபதி, தாசில்தார் ஜெயபிரகாஷ் உடனிருந்தனர்.

Similar News

News October 22, 2025

திண்டுக்கல்லில் 40 பேருக்கு தீக் காயம்!

image

தீபாவளியன்று கவனக்குறைவால் பட்டாசு வெடித்ததில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் காயமடைந்தனர். நிலக்கோட்டை, நத்தம், ஆத்துார், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், வேடசந்துார், பழனி ஆகிய பகுதிகளில் 13 அரசு மருத்துவமனைகளில் 28, திண்டுக்கல் அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் 12 பேர் என 40 பேர் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News October 22, 2025

கொடை: கர்ப்பிணி பெண்ணை தாக்கிய காட்டெருமை!

image

கொடைக்கானல்: ஏரிச்சாலை அருகே கன்றுடன் உலா வந்த காட்டெருமை திடீரென இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் 7 மாத கர்ப்பிணியான விஜி (27) மற்றும் அவரது கணவர் விக்கி (28) இருவரும் படுகாயமடைந்தனர். அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் விஜி மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

News October 22, 2025

திண்டுக்கல்லில் போக்குவரத்துக்கு மாற்றம்

image

திண்டுக்கல் உட்கோட்டத்தை சார்ந்த NH209 (திண்டுக்கல் – பழனி சாலை) சண்முகநதி பாலத்தில் (கிமீ 59/650 – 59/840) 22 மற்றும் 23 அக்டோபர் 2025 அன்று சாலைப்பணி நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்று பாதை வழியாக செல்லமாறு அறிவுறுத்தப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பொதுமக்கள் இதனை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

error: Content is protected !!