News April 1, 2025

குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பானை வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கவனத்திற்கு குரூப் 1 மற்றும் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. என அறிவித்திருக்கின்றனர்.

Similar News

News December 29, 2025

திருவள்ளூர்: ’நான் செத்துவிட்டேனா?’ – எம்.எல்.ஏ ஆத்திரம்

image

புதுமாவிலங்கை கிராமத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்ட, நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் கோபித்து கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நன்றி உரையின் போது, பெயரை அதிகாரிகள் கூறவில்லை என கோபமடைந்து புறப்பட்டு சென்றார். மேலும் ’நான் வருவதற்கு முன்பே ஓபன் பண்ணா எப்படி? நான் செத்துட்டேன்னு நினைத்தீர்களா?’ என ஆட்சியரிடம் கோபப்பட்டு சென்றார்.

News December 29, 2025

பிரவீன் சக்ரவர்த்திக்கு சசிகாந்த் செந்தில் எதிர்ப்பு

image

உ.பி.யை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ‘கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடல் எடையை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மானிப்பது போன்றதாகும்’ என தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

திருவள்ளூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்

error: Content is protected !!