News April 28, 2025
குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
தருமபுரி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
தருமபுரி : மகளிருக்கு இந்த எண்கள் அவசியம்!

தருமபுரி மாவட்ட மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் ஏதேனும் பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 8, 2026
ஆரூரில் போட்டியிட விருப்ப மனு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி நிர்வாகி கவிதா மோகன்தாஸ் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.


