News April 28, 2025
குருபர அள்ளி கிணற்றில் விழுந்த முதியவர்

மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபர அள்ளி பகுதியை சேர்ந்தவர் மந்திரி(55). உணவு சாப்பிட்டு கைகழுவ சென்றபோது இவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். அரூர் தீயனைப்பு துறையினர், இவரது உடலை மீட்டு அரூர் G.H. க்கு அனுப்பி வைத்தனர். இவரது இறப்பு குறித்து மொரப்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
தருமபுரி வாக்காளர்களுக்கு ஆட்சியரின் அறிவிப்பு!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதியில் 19.12.2025 இன்று முதல் 18.01.2026 வரையிலான காலத்தில் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பெறப்படும். மேலும் இணைய வழியிலும் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் “New Voters Registration” என்ற இணைய பக்கம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம், என தருமபுரி ஆட்சியர் சதிஸ் தெரிவித்தார்.
News December 19, 2025
தருமபுரியில் 12 பேர் மீது வழக்குபதிவு!

தருமபுரி, பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, SIR எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட புரட்சிகர அமைப்பை சேர்ந்தவர்கள் மீது நேற்று (டிச.18) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சத்தியநாதன்(46) விஜய குமார்(45) கோபிநாத்(41) பெருமாள்(38) உள்ளிட்ட 12 பேர் மீது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதாகவும் & பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி பென்னாகரம் எஸ்.எஸ்.ஐ மாதையன் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
News December 19, 2025
BIG NEWS: தருமபுரியில் 81,000 பேர் நீக்கம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 12 லட்சத்து 3 ஆயிரத்து 917 பேரில் 81,515 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 6.34% வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதிஸ் கூறினார்.


