News January 13, 2025
குரிசிலாப்பட்டு பகுதியில் பொங்கல் விழாவில் ஆட்சியர்

திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குரிசிலாப்பட்டு ஊராட்சியில் இன்று (ஜனவரி 14) தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுற்றுலாத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 8, 2025
தேசிய நெடுஞ்சாலையில் உயிரிழந்தவர் விபரம்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நசுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் வசிக்கும் மரியாள் என்பவர் தனது சகோதரர் ஸ்டீபன் ( 26 ) தான் இறந்தவர் என நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
திருப்பத்தூரில் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பு!

திருப்பத்தூர் புத்தகத் திருவிழா 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. புத்தக கண்காட்சியை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிப்பதாக ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி அறிவித்துள்ளார். எனவே இன்று டிசம்பர் 8 தேதி முடிவடைய இருந்து புத்தக கண்காட்சி டிசம்பர் 9,10,11 ஆகிய மூன்று நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவித்துள்ளனர். ஷேர் பண்ணுங்க.
News December 8, 2025
திருப்பத்தூர்:ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரம்

டிசம்பர் 07 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி என்னும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது


