News March 20, 2024
குரங்குகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி- ஒசூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மேலுமலை காட்டில் ஏராளமான குரங்குகள் உள்ளன. அவை உணவு தேடி சாலையோரங்களில் காத்து கிடக்கின்றன. சில நேரங்களில் உணவுக்காக சாலையை கடக்கும்போது வாகனங்கள் மோதி இறக்கின்றன. எனவே வனத்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News December 19, 2025
கிருஷ்ணகிரியில் வெடிகுண்டு வீச்சு!

கிருஷ்ணகிரி அருகே பேருந்து மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த வழக்கில் சக்திவேல், தனுஷ், சேகர் ஆகிய மூவரை கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு நாட்டு வெடிகுண்டுகளை வழங்கிய தர்ஜூன் நிஷா மற்றும் 125 கிலோ வெடிபொருட்களைப் பதுக்கி வைத்திருந்த பர்கத்துல்லா ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 19, 2025
கிருஷ்ணகிரி: 12ஆவது படித்திருந்தால் அரசு வேலை!

கிருஷ்ணகிரி மாவட்ட மக்களே.., மத்திய அரசின் CBSE துறையில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 12ஆவது படித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.20,000 முதல் 56,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! விண்ணப்பிக்க டிச.22ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News December 19, 2025
கிருஷ்ணகிரியில் 663 பேருக்கு வேலை ரெடி!

தமிழகத்தில் ஸ்னைடர் எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ.718 கோடி முதலீடு செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. சென்னை மற்றும் கோவையில் உள்ள ஆலைகள் விரிவாக்கம் செய்யப்படுவதோடு, ஓசூரில் புதிய ஆலை ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 663 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


