News March 19, 2024

கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

image

கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று(மார்ச் 18) நடந்தது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் பேருரை ஆற்றினார். முதுநிலை பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளிலும் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

Similar News

News October 17, 2025

தஞ்சை: அரசு மதுபான கடையை உடைத்து திருட்டு

image

பரக்கலக்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் அரசு மதுக்கடை வயல்வெளிக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கடை விற்பணை முடித்து கடையை பூட்டி விட்டு சென்ற நிலையில், நேற்று கடையை திறக்க வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு ரூ.15,000 மற்றும் 96 மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

News October 17, 2025

தஞ்சாவூர் மீனவர்கள் மூன்று பேர் சிறைபிடிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் கள்ளிவயல்தோட்டம் பகுதியை சேரந்த பாயிஸ்அக்ரம் என்பவருக்கு சொந்தமான நாட்டுபடகில், ராஜா முரளி (30), குமார் (32), புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா (53) ஆகியோர் நேற்று இரவு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று (அக்.16) மதியம் இலங்கை கடல் எல்லையான, அனலைத்தீவு பகுதியில், மீனவர்களின் படகு சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு விசாரித்து வருகின்றனர்.

News October 17, 2025

தஞ்சை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தஞ்சாவூர் மணிமண்டபம் எதிரில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நேரிலோ அல்லது https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதளம் வாயிலாகவோ 30.11.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!