News December 5, 2024

கும்பகோணத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை

image

டிசம்பர் 6 ந் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ள‌ நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ரெயில் நிலையத்தில் பயணிகள் கொண்டு வரும் உடமைகளை மோப்பநாய் ராக்கி உதவியுடன் தீவிர பரிசோதனை பிறகே உள்ள அமைதிப்படுகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களிலும் போலீசார் பரிசோதனை செய்கின்றனர். 

Similar News

News November 19, 2025

தஞ்சை: பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சி

image

சார் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அதிகமான பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள், நேற்று கும்பகோணம் மாநகராட்சி பகுதியில், அங்கன்வாடி ஊழியர் சித்ரா என்ற பெண் S.I.R பணியில் வேலைப்பளு காரணமாக அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார், அவரை உறவினர்கள் மீட்டு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

News November 19, 2025

தஞ்சை: மீண்டும் மழை எச்சரிக்கை!

image

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News November 19, 2025

தஞ்சை அருகே கல்லூரி மாணவர் பரிதாப பலி!

image

தஞ்சையை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (20). திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு டீக்கடைக்கு சென்றார். ஆர்.எம்.எஸ். காலனி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த பிரவீன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றது

error: Content is protected !!