News August 26, 2024
குமரி மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த கேரள மீனவர்கள்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 15 பைபர் படகுகளில் குமரி மாவட்ட மீவனவர்கள் ஆழ்கடலில் நேற்று (ஆக. 25) மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அருகில் உள்ள கேரள விழிஞ்ஞம் மீன்பிடி துறைமுகத்தில் விற்கச் சென்றபோது, ஞாயிற்றுக் கிழமை விற்க அனுமதி இல்லை எனக்கூறி கேரள மீனவர்கள் அவற்றை அபகரித்து ரூ.5 லட்சம் ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுக்காமல் படகுகளை சிறைபிடித்து மீனவர்களை திருப்பி அனுப்பினர்.
Similar News
News December 3, 2025
குமரி: பெண் மருத்துவரிடம் தகராறு செய்த நபர்

தக்கலை அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்த மடிச்சல் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் (40) என்பவரை, மருத்துவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் கைது செய்தனர். நெற்றி காயத்திற்கு சிகிச்சை பெற வந்தபோது அவர் ரகளையில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
News December 3, 2025
குமரி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

குமரி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!
News December 3, 2025
குமரி: தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

குளச்சல் அருகே பன விளை சேர்ந்தவர் ஞானசௌந்தரி (64) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் ஆனப்பாங்குழியில் உள்ள அக்கா வீட்டில் அவரது பராமரிப்பில் இருந்து வந்தார். இவர் பலா மர இலைகளை பறிப்பதற்காக பக்கத்து வீட்டு மாடியில் ஏறிய போது கீழே விழுந்த அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக குளச்சல் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.


