News March 21, 2024
குமரி: மின்னணு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

குமரி மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர வைப்பறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதி வாரியாக அனுப்பி வைக்கும் பணி நேற்று(மார்ச் 20) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News September 18, 2025
குமரி: அலையில் சிக்கிய வாலிபர்

பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் ரசீத்குமார் (வயது 27) மாற்றுத்திறனாளியான இவர் நேற்று பெரியக்காடு கடற்கரைக்கு சென்றார். அப்போது அவர் அலையில் சிக்கிக் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News September 18, 2025
கன்னியாகுமரி பகவதி அம்மன் நவராத்திரி திருவிழா தேதி!

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலய நவராத்திரி திருவிழா வரும் செப்.23ம் தேதி துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் திருவிழா நாளான அக்டோபர் 2ம் தேதி காலை அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் பரிவேட்டைக்கு புறப்படுதல், இரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு ஆகியன நடக்கிறது.
News September 18, 2025
7524 மனுக்களுக்கு இதுவரை தீர்வு – ஆட்சியர்

குமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 16.09.2025 வரை 210 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு 1,05,305 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட 7524 மனுக்களுக்கு இதுவரையிலும் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.