News March 10, 2025
குமரி மாவட்ட மக்கள் குறைத்தீர் கூட்டம் நிறைவு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் சார்பில் வீட்டுமனை பட்டா, கடன் உதவி, பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது. மொத்தம் 575 மக்கள் பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட நிலையில், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News March 11, 2025
குமரியில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டி தீர்க்கும் மழை

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது, இந்நிலையில் இன்று இரவு 10 மணி வரை குமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்.
News March 11, 2025
கனமழையால் வனப்பகுதிக்கு செல்ல தடை விதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. மாவட்ட ஆட்சியரும் இன்று பொதுமக்களுக்கு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று காளிகேசம் சுற்றி உள்ள மலை பகுதியில் அதிகமான மழை பெய்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா தலமான காளிகேசம் செல்ல பொதுமக்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
News March 11, 2025
குமரி TO காஷ்மீர் ரயில் சேவை – ரயில்வே திட்டம்

தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு நேரடி ரயில் கிடையாது. சாலை மார்க்கமோ, விமானம் மூலமாகவோதான் செல்ல முடியும். இந்த குறையை போக்க கன்னியாகுமரி (அ) ராமேஸ்வரத்தில் இருந்து காஷ்மீருக்கு 4,000 கி.மீ. தூரம், அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையைத் தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ஏப்ரலில் இந்த ரயில் விடப்படவுள்ளதாக தகவல். இது வெற்றி பெறும் நிலையில் குமரி – ஜம்மு காஷ்மீர் ரயில் இயக்கப்படும். SHARE IT.