News January 3, 2025
குமரி மாவட்ட தொகுதிகள் பாஜக மறு சீரமைப்பு

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் குமரி மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டு குமரி கிழக்கு, குமரி மேற்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் மேற்கு மாவட்டத்தில் கிளியூர் பத்மநாபபுரம் விளவங்கோடு ஆகிய தொகுதிகளும் அடங்கியுள்ளன.
Similar News
News December 18, 2025
குமரி: தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

முளகுமூடு கல்லுவிளை பெயிண்டர் லிபின். இவர் டிச.16.ம் தேதி குளச்சல் துறைமுகத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினர். குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து லிபினின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News December 18, 2025
குமரியில் 2,500 காலியிடங்கள்… கலெக்டர் அறிவிப்பு!

குமரி வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (டிச.19) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 27 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2,500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th,12th டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News December 18, 2025
குமரி: அரசு பஸ்சில் நூதன திருட்டு!

கருங்குளத்தாவிளை பகுதியை சேர்ந்தவர் அம்பிகாவதி. இவர் தனனுடைய 2 வயது குழந்தையுடன் அரசு பஸ்சில் நாகர்கோவில் சென்றுள்ளார். கூட்டமாக இருந்ததால் அம்பிகாவதியிடம் இருந்து பெண் ஒருவர் குழந்தையை வாங்கியுள்ளார். செட்டிகுளம் சந்திப்பு வந்தபோது குழந்தையை கொடுத்துவிட்டு அந்த பெண் இறங்கி சென்றார். அதன் பின் குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை திருடு போனது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை.


