News August 14, 2024
குமரி மாவட்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் முதல்வர் விருதுக்கு தேர்வு

சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் விருதுக்கு குமரி மாவட்ட பெண் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பார்வதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் இந்த விருது வழங்கப்படுகிறது. இவர்
கடந்த 2004ஆம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 30, 2025
குமரி: 40 பேர் மீது குண்டாஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, 2025-ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை இதுவரை 40 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீதான கடும் நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
News November 30, 2025
நாகர்கோவில் மக்களுக்கு இறுதி வாய்ப்பு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு இறுதி வாய்ப்பாக இன்று (நவ. 30) ஒருநாள் மட்டும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உங்கள் வீடுகளுக்கு கணக்கீட்டு படிவங்களை பெற வருவார்கள். மேலும், வரும் திங்கள் முதல் பூர்த்தி செய்த தங்களது கணக்கீட்டு படிவங்களை நீங்கள் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். SHARE
News November 30, 2025
சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான மாதிரி தேர்வு

குமரி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர்(SI) தேர்வுக்கான 24வது முழு மாதிரி தேர்வு 30.11.25 காலை 9.30 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள வெற்றிப்பாதை படிப்பகத்தில் வைத்து நடைபெறும்.
இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுவதாக மாவட்ட காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.


