News January 13, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9 மணி; கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி ரப்பர் கழக தொழிற்சாலை முன்புதோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 42 வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது.  காலை 11 மணி; கீரிப்பாறை காவல் நிலையம் முன்பு காவல்துறை தங்கத்துரை என்பவர் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடக்கிறது.

Similar News

News December 11, 2025

குமரி மாவட்டத்தில் புதிதாக 212 வாக்குச்சாவடிகள் அமைப்பு

image

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 212 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் 1702 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனுடன் சேர்த்து மாவட்டத்தில் தற்போது 1914 வாக்குச்சாவடிகள் உள்ளன.

News December 11, 2025

குமரி: EB கட்டணம் அதிகமா வருதா?

image

குமரி மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

குமரி: இந்த புகார்களுக்கு இனி Police Station அலைய வேண்டாம்!

image

குமரி மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.t police.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!