News January 2, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.,2) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலைகளுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழகத் தொட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறை தொழிற்சாலை முன்பு 33வது நாளாக உண்ணாவிரத போராட்டம்.#காலை 10:30 மணிக்கு உடை அடி ஆதிதிராவிடர் நல பள்ளியில் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக காத்திருப்பு போராட்டம்.

Similar News

News November 19, 2025

குமரி: பணி நெருக்கடி – ஊழியர் தற்கொலை முயற்சி

image

குழித்துறை நகராட்சி அலுவலக உதவியாளர் ஆனந்த்(30)க்கு ஆணையாளர் சுபிதாஸ்ரீ சில நாட்களாக அதிக பணிச்சுமை நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்து வந்தார். அலுவலகத்தில் இருந்து நேற்று சென்ற ஆனந்த் குளியல் அறையில் விஷம் குடித்து உள்ளார். மயங்கிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அலுவலக உதவியாளர் தற்கொலை முயற்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

News November 19, 2025

குரியன்விளை கோவிலில் 1008 இளநீர் அபிஷேகம்

image

களியக்காவிளை அருகே குரியன்விளையில் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் முதல் நாள் தேவியின் சுயம்புவில் இளநீர் அபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் கார்த்திகை மாத முதல் நாளான நேற்று கணபதி ஹோமம் விக்கிரமன் சுவாமி தலைமையில் நடந்தது. தொடர்ந்து தேவியின் சுயம்பு எழுந்தருளல், பக்தர்கள் சமர்பித்த 1008 இளநீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பக்தர்கள், பெண்கள் பலர் பங்கேற்றனர்.

News November 18, 2025

கன்னியாகுமரி: வாக்காளர்கள் கவனத்திற்கு

image

குமரி மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க.
1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!