News March 8, 2025
குமரி மாவட்ட ஆட்சியருக்கு விருது

பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவுக்கு, உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழையும் விருதையும் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.*ஷேர் பண்ணி எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க*
Similar News
News March 10, 2025
மண்டைக்காடு கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வந்து குவித்த வண்ணம் உள்ளனர். விடுமுறை தினமான நேற்று(மார்ச் 9) கடற்கரை பகுதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
News March 9, 2025
நாகர்கோவில் கொடூர கொலைக்கு காரணம் ரூ.150

நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த வேலு எரித்து கொலை செய்யப்பட்டது, தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி திருமலாபுரத்தைச் சேர்ந்த சுதன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்த போது, மது குடிப்பதற்காக 150 ரூபாய் வேலு பாக்கெட்டில் இருந்து எடுத்ததாகவும், அவர் காட்டிக் கொடுத்து விடுவார் என கல்லால் தாக்கி எரித்துக் கொன்றதாகவும் கூறியுள்ளார். *ரூ.150 க்காக கொலையா? உங்கள் கருத்தை கமெண்ட் பன்னுங்க*
News March 9, 2025
குமரிக்கடலில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் இம்மாதம் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் சூறைக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்வதை இந்த தேதிகளில் தவிர்ப்பது நல்லது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. விவசாயிகள் நெல் அறுவடை பணிகளை நாளை திங்கட்கிழமைக்குள் முடித்து விடுவதும் நல்லது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.