News September 13, 2024
குமரி மாவட்ட அணைகளுக்கு நீர் வரத்து விபரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 646 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 223 கன அடியும், சிற்றாறு 1 அணைக்கு 126 கனஅடியும், சிற்றாறு 2 அணைக்கு 5 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கன அடி நீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 410 கனஅடி நீரும், சிற்றாறு 1 அணையில் இருந்து 150 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
குமரி: ரேஷன் கடைக்கு போறீங்களா? இத பண்ணுங்க!

குமரி மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். பயனுள்ள தகவல் மறக்காம SHARE பண்ணுங்க..
News December 27, 2025
குமரியில் இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

குமரியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
News December 27, 2025
குமரி: சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலி!

குமரி – பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் தங்கம் (75). இவருக்கு திருமணம் ஆகவில்லை. முஞ்சிறையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் சமையல் செய்யும் போது அவரது சேலையில் எதிர்பாராத விதமாக தீ பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (டிச.26) உயிரிழந்தார். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


