News August 17, 2024
குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிற்றாறு ஒன்று அணைப்பகுதியில் 35.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், சுருளோட்டில் 23.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து, மழையினால் பேச்சுப்பாறை அணைக்கு 723 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 501 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.
Similar News
News November 24, 2025
குமரி மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் அறிவிப்பு

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிவிப்பின்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 ஆம் தேதி உருவாகும் .
இதனால் குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழ் கடல் மீன் பிடிப்பவர்கள் உடனே திரும்பவும் மீன் பிடிக்கும் உபகரணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 24, 2025
சுசீந்திரம் கால பைரவருக்கு ராகு கால பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெப்பக்குளக்கரையில் அமைந்திருக்கும் திருவாவடுதுறை ஆதீனம் காலபைரவர் சுவாமிக்கு இன்று (நவ.23) ராகு கால சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னிட்டு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.