News December 5, 2024
குமரி மாவட்டத்தில் 400 பேர் மீது வழக்குப்பதிவு

நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி குமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 சப் டிவிஷனில் போலீசார் நேற்று இரவு முதல் இருசக்கர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்ததுடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்ற செயல்களுக்காக 400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News December 3, 2025
குமரி: 250 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல்

கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் திக்கணங்கோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் விஷச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரமேஷ் (45) ,கிருஷ்ணகுமார் ( 49) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 3, 2025
மார்த்தாண்டம் சந்தையில் ஒருவர் சடலமாக மீட்பு

நல்லூர் பாறைவிளையைச் சேர்ந்த, திருமணம் ஆகாத காய்கறி வியாபாரி பீட்டர் (35), குடிபழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று டிச.2ம் தேதி இரவு மார்த்தாண்டம் காய்கறி சந்தையில் மரணமடைந்த நிலையில் கிடந்தார். தகவல் பெற்ற மார்த்தாண்டம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 3, 2025
நாகர்கோவிலில் இருந்து கோவாவிற்கு சிறப்பு ரயில்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து கோவா மாநிலம் மடகானுக்கு 23ம் தேதி முதல் அடுத்த மாதம் 6ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதை போன்று மடகாணியில் இருந்து 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை புதன்கிழமை நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.இதற்கான அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.


