News April 16, 2025
குமரி மாவட்டத்தில் 34 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு அணைகள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.34 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி அணைகள் பாசனத்திற்காக திறக்கப்படுவதற்கு முன்பு கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க நீர் வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
குமரியில் ஜேசிபி டிரைவர் கொலை

கொல்லங்கோடு அருகே நடைக்காவு பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த JCP டிரைவர் சதீஷ்குமார் என்பவரை வாய் தகராறில் சாம்சன், சுனில், சோபகுமார், பிஜூ, அனில்குமார் ஆகியோர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் காயமடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 22, 2025
குமரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அவ்வப்போது கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் மின் சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் எனவும் மழைக்காலங்களில் நீர் நிலைகள், மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். மேலும் மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக 24 மணி நேரமும் இயங்கும் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
குமரி: PF குறைதீர் முகாம் அறிவிப்பு

வருங்கால வைப்பு நிதி மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் இணைந்து நடத்தும் வருங்கால வைப்பு நிதி உங்கள் அருகில் 2.0 குறை தீர்க்கும் முகாம் அக்.27 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் தொழிலாளர்கள் குறைகளை நேரடியாக முன்வைத்து தீர்வு பெறலாம் என நாகர்கோவில் மண்டல ஆணையர் சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.