News January 24, 2025

குமரி மாவட்டத்தில் இன்று சலூன் கடைகள் அடைப்பு!

image

மருத்துவர் சமுதாய மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தனி சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று(ஜன.24) சலூன் கடைகளை அடைத்து மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்திற்கு குமரி மாவட்ட தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை ஆதரவு தெரிவித்து, இன்று ஒரு நாள் மாவட்டம் முழுவதும் சலூன் கடைகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 12, 2025

குமரி: அழுகிய நிலையில் டிரைவர் சடலமாக மீட்பு

image

மணக்காவிளை வெள்ளைப் பாறையடி பகுதி டிரைவர் கிறிஸ்டோபர் (53). 8 மாதங்களுக்கு முன்பு இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றார். வீட்டில் கிறிஸ்டோபர் தனியாக வசித்து வந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து (டிச.10)ம் தேதி இரவு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் தக்கலை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் உடலை கைப்பற்றினர்.

News December 12, 2025

குமரி: பெண்குரலில் பேசி மோசடி; இளைஞர் கைது

image

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பார்த்திபன் தனியார் திருமண தகவல் நிலையத்தில் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்திருந்தார். அவரை குமரி மாவட்ட பெண் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.17.50 லட்சம் முதலீடு செய்து நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி ஏமாற்றி உள்ளார். நேற்று அரியலூர் போலீசார் பெண் குரலில் பேசி பார்த்திபனை ஏமாற்றிய கல்குளம் அசார் (36) என்பவரை கைது செய்து செல்போன், சிம் பறிமுதல் செய்தனர்.

News December 11, 2025

குமரி மாவட்டத்தில் புதிதாக 212 வாக்குச்சாவடிகள் அமைப்பு

image

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 212 புதிய வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே மாவட்டத்தில் 1702 வாக்கு சாவடிகள் உள்ள நிலையில் 1200 வாக்காளர்களுக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிதாக இந்த வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனுடன் சேர்த்து மாவட்டத்தில் தற்போது 1914 வாக்குச்சாவடிகள் உள்ளன.

error: Content is protected !!