News April 22, 2025
குமரி மாவட்டத்தின் வரலாறு

குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கி.மு.1500 முதல் 1000 ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரியின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது.தற்போதைய குமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.கி.பி. 276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ் என்பவரின் குறிப்பேட்டிலும் குமரி பற்றிய பதிவு உள்ளது.
Similar News
News December 14, 2025
குமரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?

குமரி மக்களே ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் 5 வருடங்களுக்கு மேல் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருக்க வேண்டும். உரிய ஆவணங்களோடு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பத்தை அளித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம் இம்மாத (31/12/2025) இறுதி வரை மட்டுமே அமலில் இருக்கும். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 14, 2025
குமரியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

தக்கலை ஆசான்கிணறு பகுதி ஜெயவேல் – மல்லிகா தம்பதியின் மூத்தமகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் கடை நடத்தி வரும் மல்லிகா, நேற்று மதியம் மகளுக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்காததால் சந்தேகத்துடன் வீட்டுக்கு வந்த போது வீடு திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகள் மின் விசிறியில் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.
News December 14, 2025
குமரி மாவட்ட அளவிலான அஞ்சலக குறை தீர்க்கும் நாள் கூட்டம்

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 24.12.2025 அன்று 10.30 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் குறைகள் இருப்பின் அதனை இக்கூட்டத்தில் நேரில் தெரிவிக்கலாம் (அல்லது) தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று தெரிவித்துள்ளார்.


