News February 17, 2025

குமரி போலீஸ் வாகனங்கள் ஏலம்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர காவல் வாகனங்களை பொது ஏலத்தில் விற்பனை செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 21.02.2025 அன்று காலை 10.00 மணிக்கு நாகர்கோவில் மறவன்குடியிருப்பு காவல் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.*ஏலம் எடுக்கும் நண்பர்களுக்கு பகிருங்கள்*

Similar News

News January 11, 2026

அகஸ்தீஸ்வரம்: ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு?

image

அகஸ்தீஸ்வரம் ரயில்வே கேட் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தது மேல்மீடாளம் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் யார்டிலி என்பது தெரியவந்தது. அவர் ரயிலில் அடிபட்டு இருந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 11, 2026

குமரி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

குமரி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 11, 2026

குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!