News March 27, 2025
குமரி போலீஸ் அதிரடி – 4 நாளில் 20 ரவுடிகள் கைது!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டேஷன் வாரியாக ரவுடிகளின் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, அதில் A,B,C பிரிவுகளில் இருப்பவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி கடந்த 4 நாளில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை மேலும் தீவிரபடுத்தப்படும் என எஸ்பி ஸ்டாலின் நேற்று(மார்ச் 26) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 30, 2025
சுசீந்திரம் கால பைரவர் கோவிலில் ராகு கால பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் திருவாவடுதுறை ஆதீனம் மடம் ஶ்ரீகாலபைரவர் திருத்தலத்தில் இன்று(நவ.30) ஞாயிறு இராகு கால பூஜையை முன்னிட்டு ஸ்ரீ கால பைரவருக்கு பால், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர்.
News November 30, 2025
குமரியில் 7 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

குமரியில் ஏழு இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவட்டாறு இன்ஸ்பெக்டர் காந்திமதி குலசேகரத்திற்கும், கோட்டாறு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தென்தாமரை குளத்திற்கும், அருமனை இன்ஸ்பெக்டர் சாந்தி நேசமணி நகருக்கும், குலசேகரம் இன்ஸ்பெக்டர் கனகராஜ் கொல்லங்கோடு, தக்கலை இன்ஸ்பெக்டர் உமா கொற்றிகோட்டிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 இன்ஸ்பெக்டர்கள் நெல்லைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
News November 30, 2025
குமரி: வாகனங்கள் FINE பற்றி இனி கவலைபடாதீங்க!

குமரி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <


