News December 5, 2024
குமரி பெண்களுக்கு விருது: கலெக்டர் பாராட்டு

குமரியை சேர்ந்த கைவினை கலைஞர்களான ஜான்சி குரூஸ் மற்றும் சிவகுமாரி ஆகியோர் தேங்காய் சிரட்டை ஓட்டில் கலை பொருட்கள் தயாரித்ததற்காக, தமிழக அரசு விருது அறிவித்தது. இதை தொடர்ந்து அவர்களுக்கு விருதை அமைச்சர் அன்பரசன் சமீபத்தில் வழங்கினார். இந்நிலையில் அந்த பெண் கைவினைக் கலைஞர்களை குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேற்று(டிச.,4) நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்.
Similar News
News September 17, 2025
குமரி: விளையட்டு விபரீதமானது; இளைஞர் உயிரிழப்பு

கொல்லங்கோடு பகுதி பட்டதாரி ஜெய்சங்கரன்(23) அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். இவர் நேற்று (செப்.16) வீடியோ காலில் செல்போனில் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டதால், காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக போர்வையால் தூக்கில் தொங்கி உள்ளார். விளையாட்டு விபரீதமாகி ஜெய்சங்கரன் கழுத்தில் போர்வை இறுகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.
News September 17, 2025
நாகர்கோவிலில் வேலைவாய்ப்பு முகாம்

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாகர்கோவில் கோணத்தில் செப்.19 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
News September 16, 2025
குமரியில் கல்வி கடன் மேளா அறிவிப்பு

குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் 2-வது கல்விக் கடன் மேளா செப்.18 அன்று கருங்கல் பெத்லஹேம் பொறியியல் கல்லூரியில் காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது. மேற்படி முகாமில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் வங்கிகளும் பங்கேற்கின்றன என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.