News March 28, 2024
குமரி: பிஷப்பிடம் ஆசி பெற்ற வேட்பாளர்

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக விஜய் வசந்த் எம்பி போட்டியிடுகிறார். இவர் கூட்டணி கட்சியினருடன் கன்னியாகுமரி மாவட்ட சி.எஸ்.ஐ. பிஷப் செல்லையாவை நேற்று சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 7, 2026
குமரி: இடம் வாங்க ரூ.5 லட்சம் – APPLY….!

நிலம் இல்லாத பெண்களுக்காவே நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விளக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News January 7, 2026
குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…!

ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த தம்பதியர் ஐயப்பன், சிவ ஆனந்தி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளன்ர். சிவ ஆனந்தி ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்த சிவ ஆனந்தி ஜன.5-ஆம் தேதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.
News January 7, 2026
குமரி மக்களே ரயில் சேவையில் மாற்றம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் 12667/68, 12689/90, 22657/68 ஆகிய மூன்று ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வேயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


