News March 21, 2024
குமரி பாஜக வேட்பாளர் அறிவிப்பு

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியலை சற்றுமுன் வெளியானது. கன்னியாகுமரியில் முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட உள்ளார். மொத்தம் 9 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை பாஜக தற்போது வெளியிட்டுள்ளது.
Similar News
News December 6, 2025
குமரி: பைக் மீது மோதிய கார்! சம்பவ இடத்திலேயே பலி

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ரஞ்சித் தாஸ் அவரது சகோதரி ரம்யா ஆகியோர் டூவீலரில் இன்று வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீதும் மோதியது. இதில் ரஞ்சித்தாஸ், ரம்யா இருவரும் மேம்பாலத்தில் இருந்து 50 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இதில் ரஞ்சிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை.
News December 6, 2025
குமரி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அரிசி கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 7 இருசக்கர வாகனங்கள், 7 ஆட்டோக்கள், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 18 வாகனங்கள் இம்மாதம் 9ம் தேதி ஏலம் விடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஏலம் நடைபெறும் என்று உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
குமரி: தண்டவாளத்தில் தலை வைத்து மாணவர் தற்கொலை

தக்கலை அருகே ரயில் தண்டவாளத்தில் நேற்று தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம் கிடந்துள்ளது. அப்பகுதி ரயில் டிரைவர் கொடுத்த தகவல் அடிப்படையில் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விசாரணையில், உயிரிழந்த இளைஞர், வேளாங்கோடு பகுதியை சேர்ந்த தாமோதரன் மகன் பவித்ரன்(18) என்பதும், அவர் நாகர்கோவில் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் விசாரணை.


