News March 26, 2025
குமரி பகவதி அம்மன் கோவில் உண்டியல் வசூல் விவரம்

குமரி பகவதி அம்மன் கோவிலில் உள்ள 17 நிரந்தர உண்டியல்கள் இன்று(மார்ச்.25) அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் இணை ஆணையர் பழனிகுமார் உதவி ஆணையாளர் தங்கம் மேலாளர் ஆனந்த் ஆய்வாளர் சுஜித் ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன. இதில் வருமானமாக ரூ.26லட்சத்து 46ஆயிரத்து 153வசூலானது. இதுதவிர 4.500 கிராம் தங்கமும் 32.950 கிராம் வெள்ளியும் வெளிநாட்டு பணங்களும் வசூல் ஆனது.
Similar News
News April 16, 2025
தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.
News April 16, 2025
குமரி மாவட்டத்தில் 34 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு அணைகள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.34 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி அணைகள் பாசனத்திற்காக திறக்கப்படுவதற்கு முன்பு கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க நீர் வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 16, 2025
குமரிக்கு சுற்றுலா வந்த கணவன், மனைவி பலி

குஜராத்தை சேர்ந்த ஹரிதாஸ்,அனுஷா தம்பதியினர் தங்கள் உறவினர்களுடன் நேற்று கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். இன்று காலை அவர்கள் தங்கி இருந்த விடுதியில் அறையில் சாவியை மறந்து வைத்துவிட்டு வெளியே சென்றவர்கள் திரும்பி வந்தபோது சாவியை எடுப்பதற்காக விடுதி உதவியாளருக்கு உதவி செய்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்து கணவன், மனைவி உயிரிழந்தனர். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.