News March 6, 2025

குமரி நீலகண்ட சாமி கோவில் தலபுராணம்

image

பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் 12 சிவாலயங்களில் 7வது சிவாலயம் ஆகும். வேணாட்டரசர்கள் இங்கே இருந்த போது, தறி கேட்டு ஓடிய குதிரை ஒன்று கோவில் இருக்கும் இடத்திற்கு வந்து அடைப்பட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டு, அங்கு கோவில் கட்டியதாக தலபுராணம் கூறுகிறது. ஆனந்தவல்லி அம்மனுக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது. 2 கொடி மரங்கள் இந்த கோவிலில் உள்ளன.

Similar News

News March 8, 2025

வெப்பத்தில் இருந்து காத்து கொள்ள வழிமுறை வெளியீடு

image

கோடைகால வெப்ப அலையிலிருந்து காத்துக் கொள்வது குறித்து சுகாதாரத்துறை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “உடலில் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்; ஓ.ஆர்.எஸ் கரைசல், எலுமிச்சம் ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை குடிக்கவேண்டும்; மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News March 8, 2025

குமரி மாவட்ட ஆட்சியருக்கு விருது

image

பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துவதற்காக சிறப்பாக செயலாற்றிய குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனாவுக்கு, உலக மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு சான்றிதழையும் விருதையும் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.*ஷேர் பண்ணி எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க*

News March 8, 2025

குமரி வெங்கடாஜலபதி கோவிலுக்கு 6500 திருப்பதி லட்டு வருகை

image

குமரி விவேகானந்தபுரத்தில் உள்ள கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை திருப்பதி லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த மாதம் 6500 திருப்பதி லட்டு கன்டெய்னர் லாரி மூலம் கொண்டுவரப்பட்டு இன்று(மார்ச்.8) முதல் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. *ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!