News April 24, 2025
குமரி: திருவள்ளுவர் சிலை பற்றிய குறிப்புகள்

குமரி முனையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் சில குறிப்புகள்; 133 அடி கொண்ட அந்த சிலை அமைக்கும் பணி 1990ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000 ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த சிலை 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. சிலையின் மொத்த எடை 7000 டன். சிலையின் எடை 2500 டன். பீடத்தின் எடை 1500 டன். பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை 3000 டன் ஆகும். Share It.
Similar News
News December 12, 2025
குமரி மக்களே ரேஷன் கார்டு இருக்கா.. முக்கிய அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் குடிமை பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டு சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் நாளை (டிச.13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இம்முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு செய்தல் போன்றவை குறித்து மனுக்கள் அளிக்கலாம். எல்லோரும் இதை தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.
News December 12, 2025
குமரி: அழுகிய நிலையில் டிரைவர் சடலமாக மீட்பு

மணக்காவிளை வெள்ளைப் பாறையடி பகுதி டிரைவர் கிறிஸ்டோபர் (53). 8 மாதங்களுக்கு முன்பு இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளுடன் இவரை விட்டு பிரிந்து சென்றார். வீட்டில் கிறிஸ்டோபர் தனியாக வசித்து வந்த நிலையில் இவரது வீட்டிலிருந்து (டிச.10)ம் தேதி இரவு துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியினர் தக்கலை போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் அங்கு சென்று அழுகிய நிலையில் உடலை கைப்பற்றினர்.
News December 12, 2025
குமரி: பெண்குரலில் பேசி மோசடி; இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பார்த்திபன் தனியார் திருமண தகவல் நிலையத்தில் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்திருந்தார். அவரை குமரி மாவட்ட பெண் ஒருவர் தொடர்பு கொண்டு ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.17.50 லட்சம் முதலீடு செய்து நிறைய சம்பாதிக்கலாம் எனக் கூறி ஏமாற்றி உள்ளார். நேற்று அரியலூர் போலீசார் பெண் குரலில் பேசி பார்த்திபனை ஏமாற்றிய கல்குளம் அசார் (36) என்பவரை கைது செய்து செல்போன், சிம் பறிமுதல் செய்தனர்.


