News March 21, 2024
குமரி: கோவில் பூஜையில் கலந்து கொண்ட மேயர்

நாகர்கோவில் அருகே அமைந்துள்ள பறக்கை ஸ்ரீதேவி பூதேவி சமேத மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா மார்ச்-15 தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பூஜையில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். உடன் மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News November 18, 2025
குமரி: மிதிவண்டி இணைப்பு பணிக்கு ஆட்கள் தேர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2025 -26 ஆம் கல்வி ஆண்டிற்கான மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மிதிவண்டி பாகங்கள் இணைக்கும் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது. மிதிவண்டி தொழிலில் அனுபவம் உள்ள விருப்பமுள்ளவர்கள் நவ.21க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார். ஷேர்.

தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி

குமரன்குடி தனியார் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது. மரியா மருத்து வக்கல்விக் குழும தலைவர் டாக்டர் ஜி.ரசல்ராஜ், துணைத்தலைவர் டாக்டர் ஷைனி தெரசா ஆகியோர் தலைமை தாங்கினர். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் இருந்து திருவட்டார் பஸ்நிலையம் வரை பதாகைகள் ஏந்தி மாணவர்கள் பேரணியாக வந்தனர். இதில் யோகா, சிலம்பாட்ட நிகழ்வுகள் நடந்தது.