News March 27, 2024
குமரி: கொத்தனார் மீது தாக்குதல்

குளச்சல் அருகே மாவிளையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58). கொத்தனாரான இவர் அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21) தனுஷ் (21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சுப்பிரமணியத்தை ஆகாஷ், தனுஷ் ஆகியோர் கம்பி, கம்பு மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மணவாளகுறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 6, 2025
குமரி: B.E. முடித்தால் ரூ.1,40,000 சம்பளத்தில் அரசு வேலை!

குமரி மக்களே, ஏவுகனை மற்றும் பாதுகாப்பு உபகரனங்கள் தயாரிக்கும் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 80 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 27 வயதுகுட்பட்ட B.E./ B. Tech, முதுகலை டிகிரி படித்தவர்கள் டிச 29க்குள் <
News December 6, 2025
குமரி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

குமரி மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 6, 2025
குமரி: பைக் மீது மோதிய கார்! சம்பவ இடத்திலேயே பலி

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ரஞ்சித் தாஸ் அவரது சகோதரி ரம்யா ஆகியோர் டூவீலரில் இன்று வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர்கள் மீதும் மோதியது. இதில் ரஞ்சித்தாஸ், ரம்யா இருவரும் மேம்பாலத்தில் இருந்து 50 அடி கீழே உள்ள சாலையில் விழுந்தனர். இதில் ரஞ்சிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரம்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை.


