News April 15, 2025

குமரி கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை 

image

 கிழக்கு கடல் பகுதியில் மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன் பிடிக்க விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு 12 மணி முதல் (ஏப்.15) அமலுக்கு வந்துள்ளது. சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகம் கிழக்குக்கடல் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கிருந்து மீன்பிடிக்க செல்லும் 350 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 19, 2025

குமரி: வெங்கடாஜலபதி கோயிலில் நாளை தீபாவளி ஆஸ்தானம்

image

திருப்பதியில் ஆண்டுந்தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல், கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி நாளை நடைபெறும். நாளை சுப்ரபாதம் நிகழ்ச்சியும், தொடர்ந்து விசேஷ பூஜைகள், சிறப்பு வழி பாடுகளும் நடைபெறும். சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து, மலர் அலங்காரம், பூலங்கி சேவை, தீபாராதனை ஆகியன நடைபெறும்

News October 19, 2025

குமரி: வீட்டில் அழுகிய நிலையில் ஆண் சடலம்

image

கண்டன்விளை பெயிண்டர் அன்பழகன் என்ற அன்பு (54). இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மதுக்குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.  நேற்று இவருக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க உறவினர் ஒருவர் சென்றபோது வீட்டில் நாற்காலியில் இறந்து அழுகிய நிலையில் இவர் காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார். தகவலின் பேரில் இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை. 

News October 19, 2025

குமரி: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

குமரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

error: Content is protected !!