News March 27, 2025
குமரி கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடல் பகுதியில் 16 முதல் 20 வினாடிகளுக்கு ஒருமுறை 0.8 முதல் 0.9 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்ப வாய்ப்புள்ளது. எனவே இன்று(27ஆம் தேதி)அலைகளின் தாக்கம் காணப்படும் என்பதால் கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இந்திய கடல் சார் சேவை மையம் நேற்று தெரிவித்துள்ளது.
Similar News
News November 23, 2025
குமரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News November 23, 2025
குமரி: 8 மாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்தவர் ஷகீலா இவருக்கு 19 ஆண்டுகளாக குழந்தை இல்லை. களியக்காவிளை பகுதியில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 5 நாட்களாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு அவர் நேற்று உயிரிழந்தார். 8 மாத கர்ப்பிணியான அவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை.
News November 23, 2025
குமரி: காசி தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் அறிவிப்பு

காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்வை முன்னிட்டு, பயணிகளின் கூடுதல் கூட்டத்தைக் கையாளும் வகையில், கன்னியாகுமரி மற்றும் பனாரஸ் (காசி) இடையே (ரயில் எண் 06001/06002) சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பயணிகள் இந்த சிறப்பு ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.


