News March 17, 2025
குமரி: எரித்துக் கொல்லப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது

குமரி அருகே உள்ள லீபுரம் பாட்டுக்குளம் கரையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது இந்த நிலையில் அவர் யார் என்று அடையாளம் தெரிந்து உள்ளது. அவர் சிவகாசி விளாம்பட்டியை சேர்ந்தவர் என்றும் கொத்தனார் என்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News March 18, 2025
இன்று புறப்படும் குமரி – மும்பை ரயில் 2.30 மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரி – மும்பை CST சிறப்பு ரயில்(எண் 01006) இன்று(மார்ச் 18) பிற்பகல 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டியிருந்தது. இணை ரயில் தாமதமாக வந்த காரணத்தால் 2 மணி 30 நிமிடம் தாமதம், மாலை 16.45 மணிக்கு CST சிறப்பு ரயில் புறப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.
News March 18, 2025
நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவன வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு

குமரி – கேரள எல்லை பகுதியான பழுகலில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து கேரள – தமிழக போலீசார் விசாரணை நடத்தி, ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு நிதி நிறுவன சொத்துகள் முடக்கப்பட்டன. தற்போது இந்த வழக்கை கேரள அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.
News March 18, 2025
10th பொதுத்தேர்வு: குமரயில் 22,044 பேருக்கு ஹால் டிக்கெட்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த தேர்வினை 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் எழுதியிருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் விநியோகம் நேற்று(மார்ச் 17) தொடங்கியது.