News May 7, 2025

குமரி: உதவி காவல் ஆய்வாளர்கள் பயிற்சி தேர்வு

image

உதவி காவல் ஆய்வாளர்கள் தேர்வுக்கான இலவச பயிற்சி நாகர்கோவில் ஆயுதப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் ஏற்பாட்டின் படி நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பயிற்சி தேர்வுகள் வருகிற மே.4ம் தேதி காலை 10 மணிக்கு மாநில அளவில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்ள 9080562503 என்ற எண்ணில் அழைத்து தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News September 18, 2025

கன்னியாகுமரி பகவதி அம்மன் நவராத்திரி திருவிழா தேதி!

image

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலய நவராத்திரி திருவிழா வரும்  செப்.23ம் தேதி துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.  விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 10ம் திருவிழா நாளான அக்டோபர் 2ம் தேதி  காலை அம்மன் வெள்ளி குதிரைவாகனத்தில் பரிவேட்டைக்கு புறப்படுதல், இரவு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு  ஆகியன நடக்கிறது.

News September 18, 2025

7524 மனுக்களுக்கு இதுவரை தீர்வு – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 16.09.2025 வரை 210 உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு 1,05,305 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு சான்றிதழ், மின் கட்டண பெயர்மாற்றம், புதிய மின் இணைப்பு உள்ளிட்ட 7524 மனுக்களுக்கு இதுவரையிலும் தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News September 18, 2025

சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி பண மோசடி

image

காஞ்சான்காடு பகுதியை சேர்ந்த பிரவின் ஜோஸ் உட்பட 6 பேர்    சிங்கப்பூர் சுற்றுலா செல்ல திருவனந்தபுரம் தனியார் டிராவல் ஏஜென்சியிடம் ரூ3,36,400 அளித்துள்ளனர். ஒரு ஆண்டுகளாகியும் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லாததால் ஏஜென்சி மேலாளர் அகஸ்டின்தாஸ் உட்பட 2 பேர் மீது  வழக்கு தொடரப்பட்டது. அதில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் களியக்காவிளையில் அகஸ்டின் தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!