News August 11, 2024

குமரி அருகே பாடம் மறந்ததால் +1 மாணவி தற்கொலை

image

குமரி பைங்குளம் பகுதியை சேர்ந்தவர் 11 ஆம் வகுப்பு மாணவி. இவர் நன்றாக படித்தும் தேர்வின்போது பாடங்கள் மறந்து சரியாக தேர்வு எழுத முடியவில்லை என வருத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்(ஆக.,9) உடல்நிலை சரியில்லை என்று கூறி பள்ளிக்கு செல்லாத இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News September 16, 2025

குமரி: உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்ட MLA ராஜேஷ்

image

மத்திய அரசை கண்டித்தும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கிள்ளியூர் வட்டார ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் சார்பாக கிள்ளியூர் வட்டார RGPRS தலைவர் P. பிரேம் சிங் தலைமையில் தொலையாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று (செப். 16) நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் கலந்து கொண்டார்.

News September 16, 2025

குமரி: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வேயில் சூப்பர் வேலை..!

image

இரயில்வே துறையில் Station Controller வேலைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
▶️ காலியிடங்கள்: 368
▶️ வயது வரம்பு: 20 – 33
▶️கல்வி தகுதி: Any Degree
▶️ பணிகள்: Station Controller
▶️ சம்பளம்: ரூ.35,400
▶️ பணியிடம்: தமிழ்நாடு
▶️ ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 15.09.2025
▶️ ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 14.10.2025. விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News September 16, 2025

குமரி: இனிமேல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..!

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று (செப் 15) கூறியதாவது,”  சிசிடிவி கேமராக்கள் அமைப்பதால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1315 சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது” என்றார். இதனால் குமரியில் குற்றச்சம்பங்கள் குறைய வாய்ப்புள்ளது.

error: Content is protected !!