News March 22, 2024

குமரி அருகே செல்போன் கடைக்காரருக்கு கத்திக்குத்து

image

குமரி, வடசேரியை சேர்ந்தவர் கார்த்திக்(28). இவர் ஒழுகினசேரியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவரது கடைக்கு பெரியவிளையை சேர்ந்த சுகுமாரன்(29) என்பவர் செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்தார். அப்போது அவர்கள் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுகுமாரன் கத்தியை எடுத்து கார்த்திக்கை குத்தியதில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 19, 2024

குமரியில் திடீர் ஆய்வு – 11 கடைகளுக்கு அபராதம்

image

குமரி பேரூராட்சி & உணவு பாதுகாப்பு துறை இணைந்து குமரியில் உள்ள கடைகள், தற்காலிக உணவு கடை என 60 கடைகளில் இன்று (நவ.19) ஆய்வு நடத்தியது. இதில் 7 கிலோ பிளாஸ்டிக் பை, 18 கிபிளாஸ்டிக் தட்டுகள் பறிமுதலுடன், காகிதத்தில் வைத்த 5 கிலோ வடை, பஜ்ஜி, சமோசா உணவு அழிக்கப்பட்டன. சுகாதாரமற்ற 3 உணவகங்களுக்கு ரூ. 3000 அபராதமும், பிளாஸ்டிக் வைத்திருந்த 8 கடைகளுக்கு தலா 2000 வீதம் ரூ.16000 அபராதம் விதிக்கப்பட்டது.

News November 19, 2024

கிறிஸ்மஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் நீட்டிப்பு

image

நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. இதைப் போன்று தாம்பரத்திலிருந்தும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News November 19, 2024

குமரி கடலில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை நாளை தொடக்கம்

image

இந்திய கப்பல்படை, இந்திய கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஆகியவை இணைந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுப்பதற்காக குமரி கடலில் நாளையும் நாளை மறுநாளும் (நவ.20,21) 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடக்கிறது. 42 கடற்கரை கிராமங்கள் கண்காணிக்கப்படுகிறது.